சென்னை ஐ.ஐ.டியில் தெரு நாய்களை சிறைபிடித்து வைத்திருப்பதாக புகார்

0 2869
சென்னை - ஐ.ஐ.டி வளாகத்தில் விதிகளை மீறி, தெரு நாய்களை பிடித்து, ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை - ஐ.ஐ.டி வளாகத்தில் விதிகளை மீறி, தெரு நாய்களை பிடித்து, ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

236 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வளாகத்தில், இது போன்று நாய்களை ஒரே இடத்தில் சிறைபிடித்து வைத்திருப்பது விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகளுக்கு எதிரானது என குற்றஞ்சாட்டி உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் இது தொடர்பாக பதிலளிக்க கோரி, ஐ.ஐ.டி பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதவிர, சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் செயலர் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments