துரைக்கண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் 5 அமைச்சர்கள் கேட்டறிந்தனர்

0 1137

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்  அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து 5 அமைச்சர்கள் இன்று நேரில் கேட்டறிந்தனர்.

கடந்த 13ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு கொரோனா இருப்பதாகவும்,  நுரையீரலில் தொற்று அதிகமிருப்பதால் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்  நேற்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் நேரில் சென்று மருத்துவர்களிடம் துரைக்கண்ணுவின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments