இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 50,000க்கும் கீழ் குறைந்தது

0 836

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 19ம் தேதி 46,791 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது.

இதேபோல்  587 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். அந்த எண்ணிக்கையை காட்டிலும்  நேற்று கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 45,149 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு 480 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 79 லட்சத்து 9 ஆயிரத்து 960ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 14ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 59,105 பேர் குணமான நிலையில், மொத்தம் குணமானோரின் எண்ணிக்கை 71 லட்சத்து 37 ஆயிரத்து 229ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments