தமிழகம் மருத்துவ துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது - முதலமைச்சர்

0 905
மருத்துவ துறையில் 2030ம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் 2030ம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் தனியார்  மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்,  மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

அரசு மருத்துவமனைகளை போல் தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

வளர்ந்த நாடுகளை காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது இந்தியாதான் என்றும் முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments