வெங்காயம் பதுக்கலுக்கு எதிரான மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை

0 1396
வெங்காயம் பதுக்கலுக்கு எதிரான மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை

வெங்காயம் பதுக்கலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரையில்,  குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்த விற்பனையாளர்கள் 25 டன் வெங்காயத்தை இருப்பு வைத்து கொள்ளவும் சில்லறை வணிகர்கள் 2 டன் வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளவும் அண்மையில் மத்திய அரசு அனுமதித்தது.

இதன் மூலம்  டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள சந்தைகளுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments