இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம்: ராஜ்நாத் சிங் உறுதி

0 1168
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம்: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநிலம் டார்ஜீ லிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இயந்திர துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்களுக்கு சாஸ்திரா பூஜை எனும் சிறப்பு பூஜையை செய்து ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார்.

சீனாவின் நடவடிக்கையால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருவதை சுட்டிக் காட்டிய ராஜ்நாத்சிங், சுமூகமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments