சென்னையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காவல்துறை தனி அதிகாரிகள் நியமனம்

0 1172
சென்னையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காவல்துறை தனி அதிகாரிகள் நியமனம்

சென்னையில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்கும்பொருட்டு காவல்துறை சார்பில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் தனி அதிகாரிகளான நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசு உதவித் தொகையை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், வாகன விபத்துக்களை ஏற்படுத்தியவர்களை வரவழைத்து, விபத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் பாதிப்புகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments