ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்: சென்னை - பெங்களூரு, மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதல்

0 1250
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்: சென்னை - பெங்களூரு, மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 8ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், பலம் பொருந்திய பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதனைத்தொடர்ந்து, அபுதாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியுடன் மோதுகிறது.

புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments