நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78,64,811ஆக அதிகரிப்பு

0 599
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78,64,811ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 50,129 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இதேபோல் கொரோனாவுக்கு 578 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78 லட்சத்து 64 ஆயிரத்து 811ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 534ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 77 பேர் குணமான நிலையில், இதுவரை குணமானோர் எண்ணிக்கை 70 லட்சத்து 78 ஆயிரத்து 123ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒருநாளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,526 குறைந்த நிலையில், மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 154ஆக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments