பாதாளச் சாக்கடை மூடி வெடித்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

0 1036
பாதாளச் சாக்கடை மூடி வெடித்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

சீனாவில் பாதாளச் சாக்கடை மூடி வெடித்ததில் சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

வடமேற்குப் பகுதியில் கான்ஷூ மாகாணத்தின் சாலையோரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் பாதாளச் சாக்கடை மூடியில் பட்டாசு வைத்தபோது, அது வெடித்துச் சிதறியது.

இதில் தலைகீழாகத் தூக்கி வீசப்பட்ட சிறுவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். பாதாளச் சாக்கடையில் மீத்தேன் வாயு அதிகமிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments