டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை மேலும் துரிதப்படுத்த வேண்டும்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

0 1196
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை மேலும் துரிதப்படுத்த வேண்டும்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி, காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மாவீரர்கள் வாழ்ந்த மண்ணான கொங்கு சீமை, வரும் சட்டமன்றத் தேர்தலில் வீரமிக்க தமிழக வரலாற்றை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும் என, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கு, மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments