கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 1762
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து ஆயிரத்து 300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஆற்றில் வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி வீதம் நீர் வருகிறது. 52 அடி உயரம் கொண்ட அணையில் 49.20 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments