நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

0 1284
நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி வீதமாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 18 ஆயிரத்து 694 கன அடி வீதமாக அதிகரித்தது.

டெல்டா பாசனப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், நீர் வெளியேற்றம் 9ஆயிரம் கன அடி வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, நடப்பாண்டில் 3-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments