மொபைல் இன்டர்நெட் வேகம் குறித்து 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 131வது இடம்

0 6108
மொபைல் இன்டர்நெட் வேகம் குறித்து 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 131வது இடம்

மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மொபைல் இணையதள வேகம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் சராசரி பதிவிறக்க வேகம் விநாடிக்கு 35 புள்ளி 26 மெகா பிட்களாக உள்ள நிலையில், இந்தியாவில் விநாடிக்கு 12 மெகா பிட்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், விநாடிக்கு 121 மெகா பிட் பதிவிறக்க வேகத்துடன் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments