பெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்

0 7345
பெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்

கர்நடகா மாநிலம் பெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் இருந்து கைக்குழந்தையை இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெங்களூர் மாநகரில் பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள ஹொசகெரகலி பகுதியில் பிறந்து 15 நாட்களே ஆன கைக்குழந்தையை கழுத்தளவு நீரில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் தேங்கிய தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வெள்ளம் வடிந்த பகுதிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனிடையே, பெருங்களூரில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யகூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments