ஸ்ரீபெரும்புத்தூர் : 5 ரவுடிகள்... அடைக்கலம் கொடுத்த பெண் வழக்கறிஞர் அதிரடி கைது!

0 6384

ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 பிரபல ரவுடிகள் கைது 14 கத்திகள் 6 நாட்டு வெடிகுண்டுகளுடன் பிடிபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் என்ற  கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை பின்புறத்தில் உள்ள கட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் அந்த பகுதிக்கு சென்ற போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, தங்கியிருந்த 5 பேரை  பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .

பிடிபட்ட 5 பேரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த  பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, விஷ்வா, பாலச்சந்தர் , சந்துரு, மகேஷ் , சிவகுமார் ஆகிய 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

கைதானவர்களிடத்திலிருந்து 14 கத்திகள் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மகாலட்சுமியையும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ரவுடிகள் மீது பல வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments