நாடு முழுவதும் ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா தொற்று

0 1335
நாடு முழுவதும் ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 78 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 650 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புடன் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 கோடியே 13 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments