அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 50 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்

0 1127
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 50 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

டிரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றன.

டெக்ஸாஸில் இதுவரை வாக்குப் பதிவு 76 விழுக்காடைக் கடந்துள்ளது. புளோரிடாவில் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடப்பதற்குள் 150 மில்லியன் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிக அளவில் இருப்பதால் யார் வெற்றியாளர் என்பதை அறிய சில வாரங்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments