CTET தேர்வு தொடர்பாக ஊடகங்களில் வந்த தகவல்கள் போலியானது - CBSE

0 623
CTET தேர்வு தொடர்பாக ஊடகங்களில் வந்த தகவல்கள் போலியானது - CBSE

CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது என்றும் அதுபோல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் CBSE தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான CTET தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், CTET தேர்வுக்கான தேதியை CBSE வெளியிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள CBSE,  சூழல் சரியான உடன், CTET தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு CTET இணையதளத்தை தொடர்ந்து கவனிக்குமாறும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments