நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் விவகாரம் : முன்னாள் டி.ஜி.பி, ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி மனு

0 1780
நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் விவகாரம் : முன்னாள் டி.ஜி.பி, ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி மனு

நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் விவகாரத்தில், முன்னாள் டி.ஜி.பி, ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நிலம் விற்பனை தொடர்பாக நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்ட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் காவல்துறை கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் டி.ஜி.பி, ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments