கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

0 1001
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 223 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீரசோழபுரத்தில் 8 தளங்களுடன் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேண்பாக்கத்தில் 4 தளங்களுடன் 119 கோடியே 21 லட்சம் செலவிலும் அலுவலக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இதற்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, 1,298 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

இதேபோல் 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments