ரத்து செய்யப்பட்ட 370 ஆவது பிரிவை திரும்ப கொண்டு வருவோம் என கூறும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தில் பீகாரில் வாக்கு கேட்டு வருவார்கள்- பிரதமர் மோடி கேள்வி

0 1824
ரத்து செய்யப்பட்ட 370 ஆவது பிரிவை திரும்ப கொண்டு வருவோம் என கூறும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தில் பீகாரில் வாக்கு கேட்டு வருவார்கள்- பிரதமர் மோடி கேள்வி

ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்பட்ட 370 ஆவது பிரிவை திரும்ப கொண்டு வருவோம் என கூறும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தில் பீகாரில் வாக்கு கேட்டு வருவார்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மோடி பாஜக கூட்டணியின் 3 பிரச்சாரக்கூட்டங்களில் அவர் பேசுகிறார். முதலாவதாக சாசராமில் உள்ள பியாதா மைதானத்தில் பேசிய அவர், பீகார் வளர்ச்சி அடைந்து விட்டதால், அதை முன்பு ஆண்ட கட்சியினர் பேராசைக் கண்ணுடன் அதிகாரத்தை கைப்பற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அந்த கட்சிகள் தங்களை பின்னுக்குத் தள்ளியதை பீகார் மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றார் மோடி. கால்வனில் நடந்த சீனாவின் தாக்குதலில் பீகாரை சேர்ந்த வீரர்கள் தாய் நாட்டை காக்கும் பணிக்காக உயிரை தியாகம் செய்தனர் என்ற மோடி அவர்களின் காலடியில் தலைவணங்குவதாக கூறினார். கொரோனாவுக்கு எதிராக பீகார் மக்கள் தைரியத்துடன் போராடினர் என மோடி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments