ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் சோதனை

0 929
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் சோதித்துப் பார்க்க தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V கொரானா தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் சோதித்துப் பார்க்க தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் இந்த சோதனையை நடத்தும். இதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பதிவு பெற்ற முதலாவது கொரோனா தடுப்பூசி என ரஷ்யா கூறும் ஸ்பூட்னிக் V தடுப்பூசி, தற்போது இரண்டாம் கட்ட கிளினிகல் சோதனைக் கட்டத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments