அமெரிக்க அமைச்சர்களின் இந்திய பயணம் : லடாக் பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அமெரிக்கா தகவல்

0 603
அமெரிக்க அமைச்சர்களின் இந்திய பயணம் : லடாக் பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அமெரிக்கா தகவல்

அடுத்த வாரம் இந்தியா வர உள்ள அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், லடாக் எல்லை பிரச்சனை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும், பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

லடாக் எல்லைப் பிரச்சனையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன என கருதுவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி தாம்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments