தேவர் குரு பூஜையை முன்னிட்டு தங்கக்கவசம் ஒப்படைப்பு

0 2253
தேவர் குரு பூஜையை முன்னிட்டு தங்கக்கவசம் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் இருந்து தங்கக்கவசத்தை பெற்று விழா குவினரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்படைத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட பதிமூன்றரை கிலோ எடையுள்ள தங்கக்கவசத்துக்கு பொறுப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் அவர் வங்கி லாக்கரில் இருந்து தங்கக்கவசத்தை பெற்று விழா குழுவினரிடம் ஒப்படைப்பார்.

வரும் 28ஆம் தேதி தேவர் குருபூஜை தொடங்குவதை ஒட்டி மதுரை வந்த துணை முதலமைச்சர் தங்கக்கவசத்தை வங்கியிடம் இருந்து பெற்று விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments