இந்தியா வரும் அமெரிக்க அமைச்சர்கள் பிரதமருடன் அக்.27ல் சந்திப்பு

0 1518
இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், வருகிற 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்.

இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், வருகிற 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்.

இந்தியா-அமெரிக்கா இடையே, தலா 2 அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை, மூன்றாவது முறையாக வருகிற 27ஆம் தேதி, டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த தகவலை, டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா உறுதிப்படுத்தினார்.

பரஸ்பர உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் குறித்து, இருநாடுகளின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேசுவார்கள் என அனுராக் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments