தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 4504
தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.

புதிதாக 3 ஆயிரத்து 77 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.

ஒரே நாளில், 4 ஆயிரத்து 314 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 45 பேர் உயிரிழந்தனர். 

சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 833 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 285 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments