இங்கிலாந்தில் கடல் உள்வாங்கியதால் துறைமுகச் சுவற்றில் ஏறிய கப்பல்!

0 5142
இங்கிலாந்தில் கடல் உள்வாங்கியதால் துறைமுகச் சுவற்றில் ஏறிய கப்பல்!

இங்கிலாந்தில் அலையால் அலைக்கழிக்கப்பட்டு கரையில் ஏறிய கப்பல் சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது.

ஃபால்மவுத் என்ற இடத்தில் கப்பல் நிறுத்துமிடத்திற்கு வந்த 80 டன் எடை கொண்ட கப்பல் ஒன்று கடலலையால் மேலும் கீழும் அசைந்தாடியது.

பின்னர் சிறிது நேரத்தில் கடல் உள்வாங்கியதால் துறைமுகத்தின் சுவற்றில் தரை தட்டி நின்றது. இதையடுத்து அங்கு வந்த மீட்புப் படையினர் கப்பலுக்கு அடியில் உருளைகளைக் கொடுத்து காத்திருந்தனர்.

பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்ததால் தரை தட்டிய கப்பலை அவர்கள் கடலுக்குள் தள்ளி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments