கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, கணக்கில் வராத 100 சவரன் தங்க நகை பறிமுதல்

0 2715
ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வரும் பெருமாளின் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து பவானியில் உள்ள அவரது வீட்டில் இன்று 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், உரிய ஆவணம் இன்றி கணக்கில் காட்டாமல் இருந்த 100 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments