இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது - சிறப்பு ஆணையம் தீர்ப்பு

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது - சிறப்பு ஆணையம் தீர்ப்பு
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது என்று, தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
அந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என தீர்ப்பளித்திருக்கிறது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த அறிவிப்பை இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments