ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடரும் விபத்துகள் - பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை

0 4328
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடரும் விபத்துகள் - பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரம் ஜலகாம்பாற நீர்வீழ்ச்சிக்கு செல்லும் இளைஞர்கள் போதையில் வழுக்கி விழுந்து இறக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அங்கு வருபவர்களில் சிலர் மது குடித்துவிட்டு அருவியின் மேற்பகுதிக்குச் செல்வது, ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது என சேட்டைகள் செய்கின்றனர்.

அவர்களில் சிலர் பாறைகளில் வழுக்கி விழுந்து அகால மரணமடைந்த காட்சிகள் இணையத்தில் உலவுகின்றன.

இப்படிப்பட்ட குடிகார இளைஞர்களால் அங்கு வரும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டப்படும் நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments