வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் R.B. உதயகுமார்

0 945
வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் R.B. உதயகுமார்

கொரோனா காலம் என்பதால் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ள கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் R.B. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை - எழிலக வளாகத்தில் அதிகாரிகளுடன் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சர், ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய R.B. உதயகுமார், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, அமைச்சர் R.B. உதயகுமார் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments