ஆப்கானிஸ்தானில் உள்ள பாக். தூதரகம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

0 4948
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக். தூதரகம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது.

இதற்காக தூதரகத்திற்கு வெளியே உள்ள மைதானம் ஒன்றில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்த நிலையில், அப்போது அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள் உள்பட 15 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments