இளைஞரின் உயிரை பலிவாங்கிய வேகத்தடை அகற்றம்..!

0 33626
திருவள்ளூர் அருகே புதிதாக அமைக்கப்பட்டு எச்சரிக்கை பலகையோ, ரிஃப்லெக்டரோ பொருத்தாமல் விடப்பட்ட வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே புதிதாக அமைக்கப்பட்டு எச்சரிக்கை பலகையோ, ரிஃப்லெக்டரோ பொருத்தாமல் விடப்பட்ட வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அரண்வாயல் குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஷ் என்ற இளைஞர் அந்த வேகத்தடை மீது ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஒரே நாளில் அந்த வேகத்தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த வேகத்தடையை தாங்கள் அமைக்கவில்லை என்றும் தங்களது அனுமதி இல்லாமலேயே அப்பகுதி வார்டு கவுன்சிலரான காவேரி அன்பழகன் தரப்பினர் தன்னிச்சையாக அமைத்துவிட்டதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments