பாகிஸ்தானில் ராணுவம்-போலீஸ் இடையே கடும் மோதல்

0 4184
பாகிஸ்தானில் ராணுவம்-போலீஸ் இடையே கடும் மோதல்

பாகிஸ்தானில் ராணுவத்திற்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மருமகன் சப்தார் அவானை கைது செய்வது தொடர்பான விவகாரத்தில், சிந்து மாகாண காவல்துறை தலைவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்தி விட்டதாக தகவல் பரவியுள்ளது.

இந்த தகவலால் பாகிஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கராச்சியில் ராணுவத்திற்கும் போலீசுக்கும் இடையே மூண்ட மோதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கராச்சி ராணுவ கமாண்டருக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments