எல்லையை பங்கிடும் நாடுகளுடன் கல்வி ஒப்பந்தமா ? பல்கலைக்கழகங்களுக்கு கட்டுப்பாடு

0 817
எல்லையை பங்கிடும் நாடுகளுடன் கல்வி ஒப்பந்தமா ? பல்கலைக்கழகங்களுக்கு கட்டுப்பாடு

இந்தியாவுடன் எல்லையை பங்கிடும் நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் கல்வி தொடர்பான ஒப்பந்தங்களை செய்ய விரும்பும் இந்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் அனுமதியை பெறுவது கட்டயாமாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம், மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

சீன மொழி கற்பித்தலுக்காக பல இந்திய  பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள  கன்பூஷியஸ் மையங்களில், சீன அரசுக்கு சாதகமான பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன என்ற தகவலை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments