அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

0 685
அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக  தலைமையிலான கூட்டணி உறுதியாக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லியிலுள்ள பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெரிவித்தார். 

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்விடுத்தவர்கள் மனித ஜென்மமே இல்லை என்றும், அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments