'ஸ்கூட்டர்' கேதர் ஜாதவிடத்தில் என்ன 'ஸ்பார்க்'கை கண்டீர்!'-தோனி மீது ஸ்ரீகாந்த் பாய்ச்சல்

0 6641

சென்னை அணியில் தொடர்ந்து கேதர் ஜாதவை களமிறக்க அவரிடத்தில் என்ன ஸ்பார்க்கை கண்டீர் என்று தோனியிடத்தில் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்விகளை கண்டதோடு, பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துள்ளது. தோனியின் தவறான முடிவுகள்தான் சென்னை அணியின் இத்தகைய மோசமான தோல்விக்கு காரணமென்று கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் கேதர் ஜாதவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பளித்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இருக்கும் அணியில் இருந்து கொண்டே எதிர் அணிக்காக விளையாடும் திறமை கொண்டவர் என்று கேதர் ஜாதவை ரசிகர்களால் கேலி செய்வதும் உண்டு. அப்படிப்பட்டவருக்கு ஆடும் லெவனில் தொடர்ந்து வாய்ப்பளித்து விட்டு இளம் வீரர் ஜெகதீசனை புறக்கணித்தது எப்படி நியாயமாகும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ் 93. 93 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்களே எடுத்துள்ளார். ஜெகதீசன் ஒரே ஒரு போட்டியில் களமிறங்கி 28 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் ஜெகதீசன், அதிரடியாக ஆடக் கூடியவர். இதுவெல்லாம், தோனிக்கு தெரிந்திருந்தும் ஜெகதீசனுக்கு ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வாய்ப்பளித்து விட்டு, மீண்டும் கரையில் அமர வைத்து விட்டார்.image

ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்கு விளக்கமளித்த தோனி, அனுபவமிக்க வீரர்களை பெஞ்சில் அமர வைத்து விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அவர்களிடத்தில் நான் எந்த ஸ்பார்க்கையும் பார்க்கவில்லை . இப்போது, அணி தோற்று விட்டது, இனிமேல் இளம் வீரர்களை களமிறக்கி பரிசோதிக்கலாம் என்கிற ரீதியில் பதிலளித்திருந்தார். தோனியின் இந்த பதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

தோனிக்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்ரீகாந்த், இந்த தொடரில் தோனி எடுத்த அத்தனை முடிவுகளுமே தவறானதாகவே இருந்தன. ஜெகதீசனிடத்தில் ஸ்பார்க் இல்லையென்று சொல்லும் தோனி, ஸ்கூட்டர் கேதர் ஜாதவிடத்தில் என்ன ஸ்பார்க்கை பார்த்தார். அல்லது பியூஸ் சாவ்லாவிடத்தில் என்னத்தை கண்டார். பியூஸ்சாவ்லாவை ஒரு வேஸ்ட்டான பந்து வீச்சாளர் என்றே சொல்லலாம். தோனி, பிராசஸ் பிராசஸ் என்று பேசிக் கொண்டிருக்கையில், சென்னை அணியின் கதையே முடிவுக்கு வந்து விட்டது என்று கடுமையாக விளாசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments