தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 19505
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அம்மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்படுள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments