வெறித்தனம்.. வெறித்தனம்.. தெறி போலீஸ்காரருக்கு மெர்சல் காட்டிய மனைவி..! ஊர் கூடி உறித்த சம்பவம்

0 33892

திருமணமாகி மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், காதலியுடன் லாட்ஜில் தங்கி இருந்த ஆயுதப்படை போலீஸ்காரரை கையும் களவுமாக பிடித்த மனைவி ஒருவர், அவர்களை சரமாரியாக தாக்கி சாலையில் இழுத்துச்சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்ட தலைநகரான பத்ராச்சலம் நகரில் ஆயுதப்படைக் காவலராக பணியில் இருக்கும் சுபாஷ் என்பவர் தான் காதலியுடன் தங்கும் விடுதியில் இருந்த போது மனைவி மற்றும் உறவினர்களிடம் சிக்கியவர்.

முகத்தை மூடியபடியே மாடியில் இருந்து இறங்கி வந்த காவலர் சுபாஷுக்கும் அவரது காதலிக்கும் அடி ஒவ்வொன்றும் அம்மி போல விழுந்தது.

2017ஆம் ஆண்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சுபாஷுக்கு  வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. காதலில் விழுந்த சுபாஷ் காதலியுடன் அடிக்கடி லாட்ஜுகளில் தங்கி வருவது அம்பலமானதால் அவருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்துள்ளது.

தனது கணவன் மற்றும் அவரது காதலி மீது ஆத்திரம் அடங்காததால் சாலையில் இருவரையும் அடித்து இழுத்துச்சென்று காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தார். மனைவியின் புகார் மீது காவலர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

வீட்டில் பொறுப்பான மனைவி இருக்க, இனிப்பு என காதலியை தேடிச்சென்றால் இது போன்ற கசப்பான தாக்குதல்கள் தவிர்க்க இயலாதவை என்பதை நெருப்பாக உணர்த்தி இருக்கிறார் காவலரின் மனைவி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments