நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

0 21105
நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய - பசிபிக் கடற்பகுதியில் நிலவும் வெப்பநிலையால், தென்மேற்கு திசையில் காற்று வீசுவதாகவும், வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளால், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை, நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments