தனது சென்னை வீட்டில் நடந்த திருட்டை அயர்லாந்தில் இருந்துக்கொண்டே கண்டறிந்த நபர்

0 20459

வெளிநாட்டில் இருந்தவாறே, சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் திருடன் நுழைந்திருப்பதை, சிசிடிவி மூலம் கண்டறிந்து, போலீசுக்கு தகவல் அளித்து, அவனை பிடிக்க வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகன் அருள்முருகன் அயர்லாந்தில் பணியாற்றும் நிலையில், சண்முக சுந்தரவள்ளி, அண்ணா நகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட திருடன் ஒருவன், வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.

அயர்லாந்தில் உள்ள அருள்முருகள், தனது மதுரவாயல் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, திருடன் நடமாட்டத்தை கண்டறிந்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்று, திருடனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஒவ்வொரு முறையும், கொள்ளை அடிக்கச் செல்லும்போதெல்லாம், போலீசாரிடம் சிக்கிக் கொள்வதாக, திருடன் சைக்கோ முரளி புலம்பியதாக, போலீசார் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments