ஆவணங்கள் இல்லாமல் ரூ.12.20 லட்சம் ரூபாயை ஏடிஎம்மில் செலுத்த முயன்ற நபர் உள்ளிட்ட 4 பேர் கைது

0 27637

சென்னையில் ஆவணங்கள் இல்லாமல் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஏடிஎம்மில் செலுத்த முயன்ற நபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, ஹவாலா கும்பலா என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி தனியார் வங்கி ஏடிஎம்மில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நாங்குநேரி சையது ஜலாவுதீனை பிடித்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர்  சையதையும்,  லாட்ஜில் அவருடன் தங்கிய 3 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில்,  14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை ஏடிஎம்முக்கு எடுத்து வந்ததாகவும் அதில் 2 கட்டமாக தலா 96,500 ரூபாயை  செலுத்தியதாகவும்  சையது கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மண்ணடியில் தொழில் அதிபர் ஒருவர் கடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பணமா, இந்த கடத்தலில் ஈடுபட்ட தவ்பீக்குக்கும் 4 பேருக்கும் தொடர்புள்ளதா எனவும்  விசாரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments