சேலத்தில் விடிய விடிய பலத்த மழை.. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

0 940
சேலத்தில் விடிய விடிய பலத்த மழை.. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

சேலத்தில் நள்ளிரவில் பெய்த மழையால், பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதனால், பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம் மற்றும் நாராயண நகர், பள்ளப்பட்டி, சத்திரம் ஆகிய தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கி வெள்ளக்காடான மாறின.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் இறைத்து ஊற்றி வெளியேற்றி வருகின்றனர்.

இதேபோன்று, மேட்டூரிலும் கூலித்தொழிலாளி ஒருவரின் வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments