3 நாள் பயணமாக கேரளா சென்றார் ராகுல்காந்தி

0 1040
3 நாள் பயணமாக கேரளா சென்றார் ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு சென்றார்.

சிறப்பு விமானம் மூலம் அங்கு சென்றவர், தொகுதியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதோடு, கட்சி பிரமுகர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

இதனிடையே, கடந்தாண்டு கவலபரா (Kavalapara) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தங்களது உறவுகள் மற்றும் உடைமைகள் என அனைத்தையும் இழந்த இரண்டு சிறுமிகளுக்கென, புதியதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை ராகுல்காந்தி அவர்களிடம் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments