வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கைவரிசை... பைக் மற்றும் பிரீத் அனலைசர் திருட்டு

0 1824
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கைவரிசை... பைக் மற்றும் பிரீத் அனலைசர் திருட்டு

சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரின் பைக் மற்றும் பிரீத் அனலைசரை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழே செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து ஆல்ஹகால் அளவை காட்டும் பிரீத் அனலைசரை கொண்டு பரிசோதித்துள்ளனர்.

பின்னர், அவர்களை நிற்கவைத்து விட்டு, வேறொரு பைக்கில் வந்தவர்களை போலீசார் விசாரிக்கச் சென்ற போது, அந்த நபர்கள், உதவி ஆய்வாளர் பால முரளியின் டியோ பைக், பிரீத் அனலைசர் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments