சுஷாந்த் வழக்கில் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியின் சகோதரர் ஒருவர் கைது

0 1890

மும்பையில் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதைத் தடுப்புப் பிரிவினர் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்ற ஒருவரை கைது செய்தனர்.

பாலிவுட்டில் போதைப் பொருள்களை சப்ளை செய்ததில் அவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப்பழகிய கேப்ரியல் என்ற மாடல் அழகியின் சகோதரன்தான் இவர்.

லோனாவலாவில் உள்ள சொகுசு விடுதியில் அதிரடி சோதனை நடத்தி இவரை கைது செய்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தம் கைதானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments