தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயார்?- சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தகவல்

0 7270
தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக தகவல் - சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை

தைவானை கைப்பற்ற சீனா ராணுவம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் தென்கிழக்கு கடல்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதையும், டிஎப்-11, டிஎப்-15 ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையான டிஎப்-17 நிறுத்தப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி, தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் கனடாவை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பும், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் புஜியனிலுள்ள கடற்படை பிரிவு தளம், குவாங்டாங்கிலுள்ள ராக்கெட் படைப்பிரிவு தளம் ஆகியவை தைவானை கைப்பற்றும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments