மகாராஷ்டிரா ஆளுநர், உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதம் கட்டுப்பாட்டுடன் எழுதியிருக்க வேண்டும் : அமித்ஷா

0 5741
மகாராஷ்டிரா ஆளுநர், உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதம் கட்டுப்பாட்டுடன் எழுதியிருக்க வேண்டும் : அமித்ஷா

மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி, அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதியபோது வார்த்தைகளை பயன்படுத்தியதில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்காத விவகாரத்தில் உத்தவ் தாக்கரேக்கு ஆட்சேபம் தெரிவித்து கோசியாரி கடிதம் எழுதியிருந்தார்.

அதில் ஹிந்துத்துவவாதி மதசார்பற்றவராகி விட்டார் என கோசியாரி விமர்சனம் செய்திருந்தார். .

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா, வார்த்தைகளை தேர்வு செய்ததில் ஆளுநர் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments