திருவள்ளூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளை... 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றதாக தகவல்

0 1960

திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை இயங்கி வருகிறது. சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கியைத் திறக்க வந்த ஊழியர்கள், முன்பகுதி கிரில் கேட்டின் பூட்டு உடைபட்டும் மேலும் சில பூட்டுகள் கள்ளச் சாவிகள் போட்டுத் திறக்கப்பட்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மேலாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அடகு வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments